dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8AM | 12-05-2021 | Short News Roundup | Dinamalar

சட்டசபை சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்கிறார். 18வது சபாநாயகராக பதவியேற்கும் அப்பாவு 2001 ல் சுயேட்சையாக ராதாபுரத்தில் வெற்றி பெற்று அரசியல் களத்தில் நுழைந்தார். 2006-ல் திமுகவில் இணைந்தார். அந்தாண்டும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று திமுக வேட்பாளராக களம் இறங்கினார். கருணாநிதியின் நன்மதிப்பை பெற்ற அப்பாவுக்கு 2016 தேர்தலிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் 44 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த தேர்தலில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்ட இன்பத்துரையை தோற்கடித்தார் அப்பாவு. சட்டசபை இன்று காலை கூடியதும் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி, சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அறிவிப்பார். பின்னர் முதல்வர், எதிர்கட்சி தலைவர், சபை முன்னவர் ஆகியோர் அவரை அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பர். சபாநாயகராக அப்பாவு ஏற்புரை நிகழ்த்தியபின், துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவியேற்கிறார். *
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement