dinamalar telegram
Advertisement

எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தின் 16வது சட்டசபையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாக களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், கொரோனா தொற்றுப் பேரிடரிலிருந்து மக்களை காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது. எனவே எம்எல்ஏ.,க்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதை கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம். இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 12-மே-2021 10:51 IST

அவங்களுக்கு இயல்பு வாழ்க்கைன்னா கடப்பா😉 கல் , பிரியாணி கடை, பியூட்டி😡 பார்லர், ஊத்தப்பம், டாஸ்மாக் பார். அதுக்கெல்லாம் இப்போ குறைச்சல் இல்லை. கூடுதலா அம்மா உணவகம்🍽🍽 சேர்ந்திருக்கு

மேலும் 2 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement