dinamalar telegram
Advertisement

முழு ஊரடங்கு அறிவிப்பால் ஊருக்கு செல்ல அவசரம்

திங்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்பவர்கள், பிற காரணங்களுக்காக வெளியூர் போனவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கே திரும்பி செல்கின்றனர். இன்றும் நாளையும் மட்டுமே பஸ்கள் வழக்கம்போல் ஓடும். ஒரே நேரத்தில் மக்கள் பஸ் நிலையங்களில் குவிந்ததால், பல மாவட்ட நகரங்களில் நெரிசல் அதிகரித்தது. சென்னை, பெருங்களத்தூரில் பயணிகள் குவிந்தனர். கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க மக்கள் முண்டியடித்தனர். போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததால் சமூக இடைவெளியை மறந்து முட்டிமோதினர். கரூர் பஸ் ஸ்டாண்டிலும் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் குவிந்தனர் .வார இறுதிநாள் என்பதால் , தொழிலாளர்கள் கூலி வாங்கி விட்டு பஸ் ஏற வந்தனர். நாமக்கல், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement