dinamalar telegram
Advertisement

தீவிர சிகிச்சை பிரிவில் மனைவி குமுதா

கொரோனா பாதித்த நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று காலமானார். அவருக்கு வயது 74. சின்னத் தம்பி திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கரையெல்லாம் செண்பகப் பூ படத்தின் மூலம சினிமாவுக்கு அறிமுகமானார். ஓவிய கல்லூரி மாணவரான பாண்டு, அதிமுக கட்சி கொடி, வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றினார். கேப்பிடல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த இவர், திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கு பெயர் பலகைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார். பாண்டுவின் மறைவுக்கு திரையிலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதித்த பாண்டுவின் மனைவி குமுதா தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement