dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8AM | 06-05-2021 | Short News Round | Dinamalar

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது. காய்கறி, பலசரக்கு கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும். அரசு மற்றும் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிக்கலாம். மருந்தகங்கள், பால் விநியோகம், பத்திரிகை விற்பனை போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படும். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய கட்டுபாடு 20ம் தேதி வரை அமலில் இருக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement