dinamalar telegram
Advertisement

7 ம்தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்

சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் இன்று ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் தி.மு.க., சட்டசபைக்குழு தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, ஸ்டாலினுக்கு தி.மு.க, பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். நாளை கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, ஆட்சி அமைக்க ஸ்டாலின் உரிமை கோருகிறார். 7 ம்தேதி கவர்னர் மாளிகையில், எளிமையாக நடக்கும் விழாவில் முதல்வராக பதவி ஏற்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement