dinamalar telegram
Advertisement

30க்கு 16 இடங்களில் வெற்றி

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. புதுச்சேரியில் மொத்த இடங்கள்: 30. என்ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டணி 16 இடங்களை கைப்பற்றியது. என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும் பாரதிய ஜனதா 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. மெஜாரிட்டிக்கு தேவையான 16 இடங்களை வென்ற என்ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டணி, இணைந்து ஆட்சி அமைக்கிறது. ரங்கசாமி முதல்வராகிறார். காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 2, திமுகவுக்கு 6 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement