dinamalar telegram
Advertisement

ஆக்சிஜன் தீர்ந்ததால் நேர்ந்த சோகம்

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்து போனதால் 8 நோயாளிகள் மரணம் அடைந்தனர். இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. மதியம் 12 மணிக்கு ஆக்சிஜன் தீர்ந்து போனது. எனினும் மருத்துவமனைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் உரிய நேரத்திற்கு வரவில்லை. தாமதமாகத்தான் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் நோயாளிகள் உயிரை காப்பாற்ற போராடினோம். எனினும், சிகிச்சையில் இருந்த ஒரு டாக்டர் உட்பட 8 பேரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவமனை இயக்குனர் டாக்டர் குப்தா தெரிவித்தார். பத்ரா மருத்துவமனையில் கடந்த வாரமும் இதே போல் ஆக்சிஜன் தீர்ந்துபோனது. ஆனால், சில நிமிடங்களில் ஆக்சிஜன் கிடைத்ததால், நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். ஆக்சிஜன் பற்றாக்குறை அனுபவங்களில் இருந்து மருத்துவமனைகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கூறினர். உயிர் காக்கும் ஆக்சிஜனை உருவாக்குவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement