dinamalar telegram
Advertisement

கட்சி முகவர்கள் 20 பேருக்கு கொரோனா!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் மே 2ம்தேதி ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வரக்கூடிய வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என புதுச்சேரி தேர்தல் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை அடுத்து முகவர்களுக்கான கொரோனா பரிசோதனை முகாம்கள் புதுச்சேரியில் 8 மையங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 20 முகவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement