dinamalar telegram
Advertisement

மதுரையில் சோக சம்பவம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். பழ வியாபாரி. இவர் தனது, மனைவி சஹர் பானு மகள் நஸ்ரின் பாத்திமா, பேத்தி இளான், இளைய மகள் ஷிபா ஆகியோருடன் சிவகாசியில் உள்ள நஸ்ரின் மாமியார் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை மகன் சாகுல் ஹமீது ஓட்டினார். திருமங்கலத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் கள்ளிக்குடி சந்திப்பைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த காரின் டயர் வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய அந்தக் கார், சென்டர் மீடியனில் மோதியது. பிறகு, சித்திக் கார் மீது மோதியது. இந்த விபத்ததில் சித்திக், மனைவி, மகள்கள், மகன் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சித்திக்கின் 7 மாத பேத்தி இளான் காயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டயர் வெடித்த காரை ஓட்டி வந்த பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியர் கெளதமன் கால்களில் காயங்களுடன் திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Sathyanarayanan Sathyasekaren
Sathyanarayanan Sathyasekaren - . 28-ஏப்-2021 19:19 IST

very sad

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement