dinamalar telegram
Advertisement

பத்மாவதி ஐடியாக்களை மத்திய அரசு செயல்படுத்தியது

மதுரையின் முதல் பெண் டாக்டர் ஆர் எஸ் பத்மாவதி . 1950ல் மதுரை நகராட்சியில் பணியில் சேர்ந்தார் . 1971ல் தான் மதுரை மாநகராட்சி ஆனது . டாக்டர் பத்மாவதி 100வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் . தெம்பாக எழுந்து நடக்கிறார்,ஆர்வமாக செய்திதாள்களை படிக்கிறார் , டிவி பார்க்கிறார், அழகாக பாடுகிறார் , தனக்கு தேவையான வேலைகளை செய்து கொள்கிறார் . பல பெண் டாக்டர்களுக்கு ரோல் மாடலாக இருக்கின்ற பத்மாவதியிடம் பேசிய போது அவர் காலகட்டத்தில் நடந்த சுவராசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் . பெண்கள் படிக்க ஆசைப்பட்டு பள்ளிக்கு கிளம்பினால் , புத்தகங்களை கிணற்றில் வீசுவிடும் காலம் அது . அப்போது பத்மாவதி அப்பா டாக்டர் சுந்தர்ராஜன் தன் பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் உருவாக்கி தர வேண்டும் என விரும்பினார் . பத்மாவதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என 15 வயதில் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினர் . அப்பா மட்டும் இவருக்கு புத்தங்களை வாங்கி கொடுத்து படிக்க சொல்லி ஊக்கப்படுத்தினார் . தான் பிறந்த போது அப்பா தனக்காக எழுதிய பாட்டை அழகாக பாடி காட்டுகிறார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement