dinamalar telegram
Advertisement

ஆக்சிஜன் உபகரண இறக்குமதியில் சிக்கல்

கொரோனாவை ஒழிக்க இந்தியாவுக்கு உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சீனா கூறியது. செயல் வேறுமாதிரியாக உள்ளது. இந்தியாவில் ஆக்சிஜன் உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய பல நிறுவனங்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், சீன அரசின் விமான சேவை நிறுவனமான சிச்சுவான், இந்தியாவுக்கு சரக்கு விமான சேவையை 15 நாட்களுக்கு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து கொரோனா சீனாவுக்கு பரவுவதை தடுக்கவே இம்முடிவு எடுக்கப்பட்டதாக, சிச்சுவான் ஏர்லைன்ஸ் விளக்கமளித்துள்ளது. 15 நாள் கழித்து இந்தியாவில் நோய் பரவலின் தீவிரத்தை பொறுத்து சரக்கு விமான சேவையை மீண்டும் தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியது. இது, ஆக்சிஜன் உபகரண ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டுள்ள இருநாட்டு நிறுவனங்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஷாங்காயில் லாஜிஸ்டிக் நிறுவனத்தை நடத்தும் சித்தார்த் சின்ஹா கூறுகையில் ஆக்சிஜன் உபகரணங்களின் விலையை ஏற்கனவே சீன உற்பத்தியாளர்கள் 40 சதவீதத்துக்கு கூட்டிவிட்டனர். சரக்கு கட்டணமும் 20 சதவீதம் அதிகரித்துவிட்டது; இப்படிப்பட்ட சூழலில் சரக்கு விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது; சீன அரசின் இந்த முடிவால் இரு நாட்டு வர்த்தகர்கள், ஆக்சிஜன் உபகரணங்களை சீனாவில் இருந்து முதலில் சிங்கப்பூர் போன்ற இதர நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்; பிறகு அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்; இதனால் ஆக்சிஜன் உபகரணங்கள் இந்தியா போய் சேர காலதாமதம் ஏற்படும் என, சித்தார்த் சின்ஹா கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement