dinamalar telegram
Advertisement

500 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி

சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. மே மாதம் மத்தியில் சென்னையில் கடுமையான வேகத்தில் நோய் பரவும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். அப்படி ஒரு நிலை வந்தால் இப்போதுள்ள மருத்துவமனைகள் ஸ்தம்பித்து விடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. இப்போது சென்னை மாநகராட்சியில் 13 இடங்களில் கொரோனா கேர் சென்டர்கள் செயல்படுகின்றன. இங்கு, 11645 படுக்கைகள் உள்ளன. இங்கு தற்போது 9 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருந்தாலும் மே மாத நெருக்கடியை சமாளிக்க, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டர்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. முதல் கட்டமாக, தென்சென்னையில் சென்னை வர்த்தக மையம், மத்திய சென்னையில் கீழ்ப்பாக்கம் இண்டோர் ஸ்டேடியம், வடசென்னையில் கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு ஆகிய மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், சென்னை வர்த்தக மையத்தில் 500 படுக்கைகளும், கே.பி. பார்க்கில் 1200 படுக்கைகளும் இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement