dinamalar telegram
Advertisement

மே 1, 2ல் முழு ஊரடங்கு ஐகோர்ட் பரிந்துரை

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க அரசுக்கு கோர்ட் பரிந்துரைத்தது. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், அதற்கு முந்தைய நாளில் பொது மக்களும், அரசியல் கட்சியினரும் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. அதன் மூலம் தொற்று பரவல் அதிகரிக்கும். அதை தடுக்கும் வகையிலேயே ஊரடங்கு பிறப்பிக்க பரிந்துரைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை 28ம் தேதியே அறிவிக்கலாம். வாக்கு எண்ணிக்கை தொடர்பான தேர்தல் பணிகளுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி வழங்கலாம் என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement