dinamalar telegram
Advertisement

மருத்துவமனைகளுக்கு அரசு அட்வைஸ்

உயிரை காப்பாற்றுவதற்காக ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க படுவது இல்லை . அதை கொடுத்தால் சீக்கிரம் குணமடைய முடியும் என தமிழக சுகாதார துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்தார் . அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை . நுரையீரல் பாதிப்பு இருந்தால் மட்டும் கொடுக்க வேண்டும். ரெம்டெசிவிர் வாங்க வேண்டும் என தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிலர், நோயாளிகளுக்கு பரிந்துரை கடிதம் எழுதி கொடுக்கின்றனர் . ஆனால் மெடிக்கல் ஷாப்பில் மருந்து கிடைக்காமல் மக்கள் அலைகின்றனர் . மருத்துவமனைகளில் மருந்து இல்லை ,என்றால் தமிழக மருத்துவ பணிகள் கழகத்தை தொடர்பு கொண்டு , நோயாளி விவரம் சொல்லி ரெம்டெசிவிர் வாங்கி கொள்ளலாம். ஒரு டோஸ் மருந்து வழங்கப்படும் . இந்த விவரத்தை நோயாளிகளுக்கு தெரிய படுத்துங்கள் . மருந்து இல்லை என சொல்லி மருந்து சீட்டில் எழுதி கொடுக்காதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement