Load Image
dinamalar telegram
Advertisement

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆலையை திறக்க சம்மதித்தன. ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்க கூடாது என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்; ஆக்சிஜனை மாநில அரசு அனுமதி இல்லாமல் பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு தரக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறினர். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, தொற்று அதிகரித்து வருவதால், சிகிச்சை அளிக்க அதிகளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம். உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து ஆலை கண்காணிக்கப்படும் என்றார். இதற்கு பெரும்பாலன கட்சிகள் சம்மதம் தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement