dinamalar telegram
Advertisement

26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு 26.4.2021 அதிகாலை 4.00 மணி முதல் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன :  அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.  பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்படலாம். வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.  சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.  அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்நது சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.  அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை ஊழியர்கள் செய்யலாம்.  மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பங்கேற்புஇல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.  திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேலும் பங்கேற்கக் கூடாது.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.  கோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement