dinamalar telegram
Advertisement

குஜராத்தில் 10 நாளில் கொரோனா மருத்துவமனை!

குஜராத்தில் 10 நாளில் கொரோனா மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ மற்றும் குஜராத் அரசு இணைந்து இந்த மருத்துவமனையை போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டி முடித்தன. இங்கு, 900 படுக்கைகள் உள்ளன. எல்லா படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. 150 படுக்கைகளுக்கு வென்டிலேட்டர் வசதி உள்ளது. இன்று இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்தது. 50 டாக்டர்களும் 150 நர்ஸ்களும் இம்மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர். இந்த மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், நாட்டிலேயே ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அதிக படுக்கைகள் குஜராத்தில்தான் உள்ளது என பெருமிதத்துடன் கூறினார். டாடா ட்ரஸ்ட் சார்பில் காந்தி நகர் ெஹலிபேட் மைதானத்தில் 1200 படுக்கைககளுடன் கூடிய கொரோனா மருத்துவமனை விரைவில் அமைக்கப்படவுள்ளது. அங்கு, 600 படுக்கைகளுடன் ஐ.சி.யு. வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அமித் ஷா கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement