dinamalar telegram
Advertisement

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை

கோவை உக்கடம் பெரியகுள கரையில் 12 அடி உயர தடுப்புச்சுவர் மழையில் இடிந்து விழுந்துள்ளது. இந்த சுவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டது. கட்டி 6 மாதம்தான் ஆகிறது. ஆறே மாதத்தில் அடித்துச் செல்லப்படும் தடுப்பணை, கட்டும்போதே இடிந்து விழும் மருத்துவமனை, திறப்பு விழாவின்போதே நொறுங்கும் மினி கிளினிக் சுவர் என்று தொடரும் "டெண்டர் அரசின்" சாதனைப் பட்டியலில் கோவை தடுப்புச் சுவரும் சேர்ந்திருக்கிறது. ஆயிரம் ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஒரு வருடம் வாரண்டி இருக்கிறது. கோடிக்கணக்கில் செலவிடும் கட்டுமானங்களுக்கு ஏன் கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை? இ-டெண்டர்கள் கூட சம்பந்திகளுக்கும், மச்சினன்களுக்கும் அளிக்கப்படும் மாயம் என்ன?! அடிப்படை வசதிகளே சரியாக இல்லாத நகரத்தில், அழகுப்படுத்தும் பணிகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் சுரண்டல்தான் என்பதன் சாட்சியே சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டுமானங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். நாளை நமதே!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
ஆப்பு
ஆப்பு - . 16-ஏப்-2021 22:42 IST

நீங்களும்தான் கேரண்டியோட கிரேன் கொண்டாந்து இந்தியன் 2 சூட்டிங் எடுத்தீங்க. கிரேன் முறிஞ்சு விழுந்து நாலு ஆள் சாவலியா?

மேலும் 3 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement