dinamalar telegram
Advertisement

ஆறுமுகம் ஜாகிர் உசேன் இடம் மாறி உடல் அடக்கம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆதிவராக நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் வயது 52. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். செவ்வாய் இரவு அவர் இறந்தார். அதே வார்டில் சிகிச்சை பெற்ற பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற 51 வயதுக்காரரும் அதே நாளில் நள்ளிரவில் இறந்தார். இருவரது உ டல்களும் கடலூர் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. புதன்கிழமை காலையில் இருவருடைய குடும்பத்தாரும் வந்தனர். அவர்களிடம் உடல்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி, பிளாஸ்டிக் பையில் வைத்து ஒப்படைக்கப்பட்டது. ஜாகிர் உசேன் குடும்பத்தார் ஊருக்கு உடலை கொண்டு சென்றனர். தங்களது மதவழக்கப்படி உடலடக்கம் செய்தனர். ஆறுமுகம் உடலை அவர் குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். கடைசியாக ஒரு முறை முகத்தைப் பார்க்க நினைத்த குடும்பத்தார் பார்சலை பிரித்தபோது அது ஆறுமுகம் உடல் இல்லை என்பது தெரிந்தது. உடனே சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதன் பிறகுதான் ஜாகிர் உசேன், ஆறுமுகம் உடல்கள் மாறியது தெரிந்தது. ஆறுமுகம் குடும்பத்தார் ஜாகிர் உசேன் ஊருக்கு சென்றனர். நீங்கள் புதைத்தது ஜாகிர் உசேன் உடல் அல்ல; ஆறுமுகம் உடல்; அதைத்தோண்டி எடுத்து தாருங்கள் என ஆறுமுகம் குடும்பத்தினர் கேட்டனர். அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவகாரம் போலீசுக்குபோனது. போலீசார் விரைந்து சென்றனர். உடலை தோண்டி எடுப்பதால் நோய் பரவாது என விளக்கிக் கூறினர். அதன்பிறகு, ஆறுமுகம் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விஷயத்தை அறிந்த ஜாகிர் உசேன் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்று சரியான சடலத்தை பெற்றனர். பிறகு இருவரது சொந்த ஊர்களில் அவரவர் மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்குகள் நடந்தன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
P Ravindran
P Ravindran - Chennai,இந்தியா . 15-ஏப்-2021 19:32 IST

இறந்தவரின் பெயரை எழுதவேண்டும் என்ற அறிவு கூடவா மருத்துவமனைக்கு இல்லை. வெட்கக்கேடு

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement