dinamalar telegram
Advertisement

தொட்டி இருந்தும் தண்ணீர் ஊற்றாத வனத்துறை

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனங்களில் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருந்து 200 க்கு மேலான யானைகள் இடம் பெயர்ந்து வந்துள்ளன. இந்த யானைகள் ஒகேனக்கல், கோடுபட்டி வனங்களில் தண்ணீர் கிடைக்குமா, உணவு கிடைக்குமா என தேடி அலைகின்றன. இது ஆண்டு தோறும் காணும் காட்சியாக இருந்தது. எனவே, யானைகளுக்கு என தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டன. அவற்றில் சோலார் பம்பு மூலம் தண்ணீர் நிரப்புவது வனத்துறையின் பொறுப்பு. ஆனால், அவர்கள் இதை செய்வதை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் தண்ணீர் இல்லை. வனங்களில் உள்ள தொட்டிகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் வெயில் தாங்க முடியாத யானைகள் தாகத்தில் தவித்து அலைமோதுவது பரிதாபமாக உள்ளது. கடந்த 10 நாட்களில் 2 யானைகள் மரணம் அடைந்து விட்டன. கடும் வறட்சியால் காட்டில் செடி கொடிகள் கருகி விட்டன. சாப்பிடவும் யானைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் யானைகள் தண்ணீர் தேடி கூட்டம் கூட்டமாக இரவு நேரங்களில் ஊருக்குள் வருகின்றன. அவற்றின் நடமாட்டத்தால் பயிர்கள் நாசம் ஆகின்றன. ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதி தொட்டிகளில் ரெகுலராக தண்ணீர் ஊற்ற வேண்டும்; கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர். தேர்தல் முடிவு வந்த பிறகுதான் இதற்கு தீர்வு காண முடியும் என வனத்துறை சொல்கிறது. யானைகளுக்கு இந்த அரசியல் புரியுமா என தெரியவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
Sankar Ramu
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ . 16-ஏப்-2021 01:08 IST

என்ன தேர்தல் வரை காத்திருக்கனுமா? அப்ப இவங்க சம்பளம் வாங்குவதில்லையா அது வரை? கொடுமையா இருக்கு இந்த பதில்.

மேலும் 3 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement