dinamalar telegram
Advertisement

மாஸ்க், இடைவெளியை மறந்தனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சி மூலம் பெரும் புகழ் பெற்றவர் காமெடி நடிகர் புகழ். நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் தனியார் செல்போன் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதை அறிந்ததும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடை முன் திரண்டனர். கொரோனா வேகமாக பரவி வருவது பற்றிய அச்சமே இல்லாமல், புகழுடன் செல்பீ எடுத்துக் கொள்ள இளைஞர்கள் முண்டியடித்தனர். சமூக இடைவெளி அறவே இல்லை. பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியவில்லை. கூட்டம் முண்டியடிப்பதைக் கண்ட போலீசார் விரைந்து சென்று லேசாக தடியடி நடத்தி ரசிகர்களை விரட்டினர். ஆனாலும் புகழ் கிளம்பிச் செல்லும் வரை சமூக இடைவெளியை மறந்து ரசிகர்கள் ஆட்டம் போட்டனர். கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டத்தை கூட்டியதற்காக அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் இன்று மட்டும் 7819 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பங்கு 437.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (7)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)
வடநாட்டு அடிமாடு
வடநாட்டு அடிமாடு - . 15-ஏப்-2021 21:49 IST

தமிழ்நாடு சரியில்லை என்றால் குடும்பத்துடன் உத்திரபிரதேசம் சென்று வாழலாம்..

மேலும் 6 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement