dinamalar telegram
Advertisement

குறைவான பாதிப்புள்ள 80 % பேர் தனிமையில் இருந்தாலே குணமாகும்

கொரோனாவின் முதல் அலையில் தப்பித்த பலர், இரண்டாம் அலையில் சிக்கிக்கொள்கின்றனர். பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இதனால் யாரும் பதட்டம் அடைய வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள் . 80 சதவீத நோயாளிகளுக்கு குறைவான பாதிப்பு ஏற்படுகிறது . 20 சதவீத பேர் தான் சீரியஸ் நிலையில் அட்மிட் ஆகின்றனர் . கொரோனா பாசிடிவ் வந்தாலே அனைவரும் மருத்துவமனைகளில் அட்மிட் ஆக வேண்டும் என அவசியம் இல்லை . குறைவான பாதிப்பு இருந்தலே , பீதியில் அட்மிட் ஆவதால் தான் , சீரியஸ் நிலையில் உள்ளவர்களுக்கு , படுக்கை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என்ற கவலை ஏற்படுள்ளது. பாசிடிவ் ரிசல்ட் வந்தவுடன் , தெரிந்த டாக்டரிடம் தெரிவியுங்கள். நோயாளியின் வயது , அறிகுறிகளின் அடிப்படையில் சி டி ஸ்கேன் , பிளட் டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியம் குறித்து அவரே சொல்லுவார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங் , மற்றும் வைட்டமின் மாத்திரைகள், சத்தான உணவு எடுத்துக்கொண்டு இரண்டு வாரம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டாலே குணமாகும் என்கின்றனர் டாக்டர்கள் . வீட்டில் ஆக்சிமீட்டர் வாங்கி வைப்பது உதவியாக இருக்கும். தினமும் ஆக்சிஜன் லெவல் செக் செய்துக்கொள்ளலாம் . SPO2 அளவு 94க்கு கீழ் சென்றால் தான் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும் . அறிகுறிகள் தெரிந்தால் , உடனே டெஸ்ட் எடுக்க வேண்டும் . நம்மால் மற்றவர்களுக்கு பரவக்கூடாது என எண்ணம் ஆழமாக பதிய வேண்டும் . ஊரடங்கு மற்றும் அரசு கட்டுப்பாடுகளால் மட்டும் கொரோனா ஒழிந்து விடாது . அனைவரும் மாஸ்க் அணிவதும் , தடுப்பூசி போட்டுக்கொள்வதும் தான் கொரோன பரவலை தடுக்க ஒரே வழி . இதை செய்யாவிட்டால் எத்தனை வருடங்கள் ஆனாலும் , வைரஸ் ஒழியாது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement