dinamalar telegram
Advertisement

திரளும் பயணிகள் திண்டாடும் கண்டக்டர்கள் !

கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. 'பஸ்களில் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி- நின்று கொண்டு பயணிக்க முடியாது'' என்பது முக்கியமான கட்டுப்பாடு. இதனால் சென்னையில் பஸ் கண்டக்டர்கள் படும்பாடு, சொல்லி மாளாத ரகம். ஆபீசுக்கு போகும் அவசரத்தில், பயணிகள், கண்டக்டர்களுடன் மல்லுக்கு நிற்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். ஈவு, இரக்கம் பார்த்து ஒன்றிரண்டு பேரை ஸ்டாண்டிங்கில் அனுமதித்தால், பாதி வழியில் பஸ்களை மறித்து பரிசோதகர்கள் இறக்கி விடும் நிலை. '' சென்னையில் 500 பஸ்கள் சும்மா தான் டெப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளன.- அந்த பஸ்களையும் கூடுதலாக இயக்க வேண்டும்' என்பது கண்டக்டர்கள் கோரிக்கை. பயணிகளுடன் வாக்கு வாதம் செய்து தொண்டை வறண்டு போன சில நடத்துனர்கள்,'' டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடைகள் ஏற்படுத்தினார்கள்- போலீசாரை காவலுக்கு போட்டார்கள்- சென்னையிலு,ம் முக்கிய பஸ் நிறுத்தங்களில் அதே போன்ற ஏற்பட்டை செய்ய வேண்டும்'' என்கிறார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement