dinamalar telegram
Advertisement

தினமலர் இயக்குனர் எல்.ஆதிமூலத்திற்கு ‛கேம் சேஞ்சர்' விருது

2020ல் கொரோனா பரவல் மற்றும் பொது முடக்கத்தால் அச்சுப் பதிப்பின் வாயிலாக பத்திரிக்கைகள் மக்களை முழுமையாக சென்றடைய முடியவில்லை. இந்த இக்கட்டான காலத்தில் பத்திரிக்கை தொழில் பாதிப்பு அடைந்தாலும், ஆன்லைன் வாயிலாக தினமலர்.காம் வாசகர்களை முழுமையாக கவர்ந்தது. குறிப்பாக ‛தினமலர் வழிகாட்டி' என்ற பகுதி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன் காரணமாக தினமலர்.காம் இணையதளத்தின் தினசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தது. தினமலர்.காம் இணையதளத்தின் சிறப்பான சேவையை பாராட்டி ‛மீடியாநியூஸ் பார் யு' நிறுவனம் மற்றும் ‛கலர்ஸ் டிவி' இரண்டும் இணைந்து 2020 ஆண்டிற்கான ‛கேம் சேஞ்சர்' விருதினை அந்த இணையதளத்தின் இயக்குனர் மற்றும் 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலத்திற்கு வழங்கி கவுரவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement