dinamalar telegram
Advertisement

சாலையோர மரங்களுக்கு தீவைப்பு!

ஆம்பூர் அருகே மர்ம நபர்கள் வைத்த தீயால் சாலையோரம் உள்ள புளிய மரம் மற்றும் விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரங்கள் எரிந்து நாசமானது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி ஊராட்சிக்குட்பட்ட உமராபாத் -- பேர்ணாம்பட்டு சாலையில் மாச்சம்பட்டு எல்லையருகே சாலையோரம் உள்ள, நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான புளிய மரங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள விவசாய நிலத்திலுள்ள நான்கு தென்னை மரங்களும் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதை அறிந்த கைலாசகிரி ஊராட்சி மன்ற செயலாளர் புகார் அளித்தார். ஆம்பூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மரங்களுக்கு தீ வைத்தது யார் என உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
JAYACHANDRAN RAMAKRISHNAN
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா . 10-ஏப்-2021 15:26 IST

மரங்களை வெட்டுவது மரங்களை அழிப்பது போன்றவை திமுக பாமக போன்வர்களுக்கு சொந்தமான இலக்காக்கள். அதை அவர்கள் யாருக்கும் விட்டு தர மாட்டார்கள். இது இவர்களின் கடந்த கால வரலாறு கூறும். ஜெயிக்க போகிறோம் என்ற மமதையிலே ஜெயித்ததாக முடிவுகள் அறிவிக்க படுவதற்கு முன்பே இப்படி என்றால் உண்மையிலே இவர்கள் ஜெயித்து வந்தால் தமிழகம் ஏப்படி இருக்கும் என்று எண்ணி பாருங்கள். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் மக்களின் அரசின் கவனத்தை திசை திருப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வாக்கு எந்திரங்களை கைப்பற்றி எதாவது குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற செய்யும் ராஜ தந்திரங்களில் இதுவும் ஒன்றோ என்னவோ. யார் அறிவார்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement