dinamalar telegram
Advertisement

வில்லியனூர் மாதா பேராலயத்தில் 144ம் ஆண்டு பெருவிழா

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6ம் நாளில் கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான லூர்து அன்னையின் 144 ஆம் ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றதுடன் துவங்கியது. காலை அருள்நிறை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர், ஆலய முகப்பில் உள்ள கொடிமரத்தில் சென்னை மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றினார்.. தொடர்ந்து நவநாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள், தேர்பவனி நடைபெறுகிறது. முக்கிய விழாவாக ஏப்ரல் 18ம் தேதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு புதுவை கடலூர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலையில் ஆடம்பர தேர்பவனி நடைபெறவிருக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement