Load Image
dinamalar telegram
Advertisement

கொரோனா 1.3 கோடியை தாண்டியது

இந்தியாவின் ஒருநாள் பாதிப்பில் மகாராஷ்டிரா தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் பங்களிப்பு 85 சதவீதமாக உள்ளது. இதில் மத்திய பிரதேச மாநிலமும் ஒன்று.. அங்குள்ள ஷாதோல் மாவட்டத்தில் ஆம்புலன்சில் கொரானா நோயாளியை ஏற்றிச் சென்ற டிரைவர் மற்றும் உதவியாளர் சாலையோரத்தில் ஆம்புலன்ஸசைநிறுத்தி விட்டு ஹாயாக கரும்பு ஜூஸ் குடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த பாதசாரி ஒருவர் நீங்களே இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால் மற்றவர்களுக்கு நோய் பரவாதா என கேட்டார். உடனே அந்த டிரைவர் நான் கொரோனா நோயாளியை கூட்டிட்டு போறேன்.. அவ்வளவுதான்.. எனக்கு கொரோனா இல்லை. அப்புறம் எப்படி நோய் பரவும் என கிண்டலாக திரும்பகேட்டார்.. தன்னை ஒருவர் படம் பிடிப்பதை பார்த்ததும் மாஸ்க்கை சரியாக போட்டுக் கொண்டார். ஆர்டர் செய்த ஜூஸ் வந்த பிறகு குடித்துவிட்டு தான் டிரைவரும் உதவியாளரும் ஆம்புலன்சை கிளப்பினர். அது வரை நோயாளி அப்பாவியாக படுத்துக் கிடந்தார்.. இந்த வீடியோ வேகமாக ஷேராகி வருகிறது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement