dinamalar telegram
Advertisement

இறப்பிலும் இணைப்பிரியாத இந்து - முஸ்லீம் நண்பர்கள்

அரியலூர்- ஜெயங்கொண்டம் பகுதியில் இறப்பிலும் இணைபிரியாமல் இந்து முஸ்லீம் நண்பர்கள் இறந்தது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெயிலாபுதீன். இவர் ரைஸ்மில் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் மற்றும் பண்டிகைகளில் ஜெயிலாபுதீன் கலந்து கொள்வார். அதுபோல் ஜெய்லாபுதீன் வீட்டில் நடக்கும் குடும்ப நிகழ்ச்சிகளில் மகாலிங்கம் கலந்து கொள்வார். இருவரும் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக அரை மணி நேரத்திற்குள்ளாக இறந்தனர். வாழ்வில் மட்டுமின்றி இறப்பிலுசக ஒன்றான நண்பர்களின் நட்பை மக்கள் நெகிழ்ந்து பேசினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement