dinamalar telegram
Advertisement

சர்கார் பட பாணியில் ஓட்டுப்போட்ட திருப்பூர் பெண்

திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட புதுராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் இன்று மாலை 2 .30 மணியளவில் தனது ஓட்டினை போட அதே பகுதியில் உள்ள 276ஏ ஓட்டுச்சாவடிக்கு சென்றுள்ளார். இவரது ஓட்டு முன்பே பதிவு செய்யப்பட்டதால் இவருக்கு ஓட்டு போடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். இது தொடர்பாக ஓட்டுச சாவடி முகவர்கள், அலுவலர்களிடம். சாந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனையடுத்து மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர் சாந்தியின் ஆவணங்களை ஆய்வு செய்து 49 பி பிரிவின் கீழ் வாக்களிக்க ஏற்பாடு செய்தார். இதனையடுத்து 17பி படிவம் கொடுக்கப்பட்டு அவருக்கு ஓட்டுப்போட ஏற்பாடு செய்தனர். இந்த மையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் சாந்தி பெயரில்கள்ள ஓட்டு பதிவு செய்தவர் குறித்து அறிய முடியாத சூழல் ஏற்பட்டது. சர்கார் திரைப்பட பாணியில் முன்னதாக செலுத்தப்பட்ட கள்ள ஓட்டினை எதிர்த்து பெண் ஒருவர் 49 பி பிரிவின் கீழ் தனது ஓட்டினை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement