dinamalar telegram
Advertisement

நடிகர் கார்த்தி டென்ஷன்

அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும், கோவில்பட்டி தொகுதியில் நவரச நாயகன் கார்த்திக் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர் அதிமுக நிர்வாகிகள், மதுரையில் இருந்து காரில் கோவில்பட்டிக்கு அழைத்து சென்றனர். கயத்தாறு பாய்ன்ட்டில் பிரசாரம் செய்வதற்காக காரில் இருந்து கார்த்திக் இறங்கினார். வரவேற்க அதிமுகவினரோ, கார்த்தி கட்சியினரோ ஒருவர் கூட அங்கில்லை. டென்ஷன் ஆகிவிட்டார் கார்த்தி. நான் யார் தெரியுமா? என்னை இந்த முச்சந்திக்கு கூட்டிட்டு வந்து அசிங்கப்படுத்திட்டீங்களே. உங்களை சும்மா விடமாட்டேன் என்று கோபம் கொப்பளிக்க காரில் ஏறி விர்ரென பறந்தார். உடன் வந்த நிர்வாகிகள் நடுரோட்டில் நின்று கொண்டு கையை பிசைந்து கொண்டு பரிதாபமாக நின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement