dinamalar telegram
Advertisement

முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி

புதுச்சேரி பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ரெயின்போ நகர், சாரம், மணவெளி ஆகிய பகுதிகளில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பெண்கள் அனைவருக்கும் இலவச பொது போக்குவரத்து வசதி செய்து தருவோம். சுயஉதவிக் குழுக்களுக்கு வட்டி யில்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் தரவுள்ளோம். அனைத்து மகளிருக்கும் இலவச மருத்துவ உதவி வழங்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தரப்படும். புதுச்சேரி மாநிலத்துக்கு நிதி அதிகரிக்க வழி செய்யப்படும். நடமாடும் ரேஷன் கடைகளை ஏற்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், “முன்னாள் முதல்வர் நாராயணசாமி பொய்யான தகவல்களை பரப்பி அரசியல் ஆதாயத்துக்காக செயல்படுகிறார். அதை மக்கள் நம்பக்கூடாது. நாராயணசாமி இலவச அரிசி திட்டத்தை நிறுத்தியதுடன், ரேஷன் கடைகளையும் மூடிவிட்டார். ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தராமல் ஓட்டு கேட்டு வருகிறார். மக்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் புதுச்சேரியை வளர்ச்சி அடைய செய்ய முடியும். 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு வேலையே தரவில்லை. செயல்படாத நாராயணசாமி ஆட்சி தேவையா என சிந்திக்க வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக பேசுவோரை அடையாளம் காணுங்கள்” என்று குறிப்பிட்டார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement