dinamalar telegram
Advertisement

புகழ்ந்து தள்ளிய அமைச்சர்

அமைச்சர் செல்லுார் ராஜு, மீண்டும் மதுரை மேற்கு தொகுதியில், களம் இறங்கியுள்ளார். பெத்தானியாபுரத்தில் கட்சி அலுவலகத்தில் அவரை சந்தித்து ரஜினி ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார். அவர்கள் மத்தியில் செல்லுார் ராஜு பேசுகையில், ''நடிகர் ரஜினி தொடக்கத்திலிருந்து பண்பு, இரக்க குணம் உடையவர். எம்.ஜி.ஆருக்கு அடுத்து ரஜினிக்கு மட்டும் தான் இந்த பண்பு உண்டு. தமிழகத்தை சூறையாடியது தி.மு.க. , அவர்கள் ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. ரஜினியை போல முதல்வரும். துணை முதல்வரும் நல்ல குணம் கொண்டவர்கள். அ.தி.மு.க.,வை நம்பியவர்கள் கெட்டு போவதில்லை,'' என ரஜினியை புகழ்ந்து தள்ளி விட்டார். ஏற்கனவே இவர் நான் ரஜினி ரசிகன் என தெரிவித்திருக்கிறார். இப்படி பேசியதன் மூலம் ரஜினி ரசிகர்கள் ஓட்டுக்களை கவர்ந்தது மாதிரியும்ஆச்சு. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை சீண்டியது மாதிரியும் ஆச்சு என, புளகாங்கிதம் அடைகின்றனர் விஞ்ஞானி அமைச்சரின் ஆதரவாளர்கள்
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement