dinamalar telegram
Advertisement

3 நாள் பிரச்சாரம்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் மனைவி போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில், மூன்று நாட்கள் பிரசாரம் செய்யவுள்ளார். அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 60 தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது. தே.மு.தி.க., விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். உடல் நலம் பாதிப்பால், விஜயகாந்த் அவதிப்பட்டு வருகிறார்; அவரால் பேச முடியவில்லை. இருப்பினும், தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பிரசாரம் செய்து வருகிறார். இதை தொடர்ந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், அவர் பிரசாரம் செய்ய உள்ளார். ஏப்., 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை, விருத்தாசலம் தொகுதியில், தன்மனைவிக்காக பிரசாரம் செய்யவுள்ளார். இத்தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும், தி.மு.க., கூட்டணியில், காங்., கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. போட்டி கடுமையாக உள்ளதால், விஜயகாந்தை, மூன்று நாட்கள் தொகுதி முழுதும் வலம் வரவைக்க, பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement