dinamalar telegram
Advertisement

12 நாளில் என்ன என்ன நடக்குமோ

இந்த தேர்தலில், தேர்தல் ஆணையத்துக்கு அடுத்து வேகமாக செயல்படுவது, வருமான வரித் துறை என்கின்றனர், அரசியல்வாதிகள், குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள், முதல் கட்டமாக, திருப்பூர், ஈரோடு பகுதிகளில், தி.மு.க., கூட்டணி கட்சியினர் இடங்களில், வருமான வரி சோதனை நடந்தது. கடந்த வாரம், திருப்பூரில், ம.நீ.ம., பொருளாளர் சந்திரசேகர் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், அவருடைய அண்ணன் தாராபுரம் கவின் நாகராஜ் வீட்டிலும், அவருடைய நண்பர், தாராபுரம் தனசேகர் வீட்டிலும்சோதனை நடைபெற்றது. கவின்நாகராஜ், ம.தி.மு.க., மாவட்ட துணை செயலராகவும், தனசேகர் தாராபுரம் நகர, தி.மு.க., செயலராகவும் உள்ளனர். ஒரு மாதத்துக்கு முன், கோவைலாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில், வருமான வரி சோதனை நடந்தது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோர் சம்மந்தப்பட்ட இடங்களிலும், சோதனை நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக, சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் ராஜின், பெரம்பூர் இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement