dinamalar telegram
Advertisement

ஆதங்கத்தை கொட்டும் நிர்வாகிகள்

ஒவ்வொரு தொகுதியிலும் பலகட்ட சர்வே எடுத்து, பல தரப்பட்ட மக்களிடம் விவரங்களை திரட்டி, அதை வைத்து ஒரு பட்டியல் மாவட்டச் செயலர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் தரப்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் கேட்டு வாங்கி தொகுத்த ஒரு பட்டியல். இப்படி தயாரான பட்டியல்களில் இருந்து பொறுக்கி எடுத்த இறுதி பட்டியல் ஸ்டாலின் கையில் இருக்கிறது. அதுதான் தி.மு.க., வேட்பாளர் பட்டியலாக வெளியாக இருக்கிறது. அந்த பட்டியலில் தி.மு.க.,வின் மாவட்டச் செயலர்கள் 40 பேரின் பெயர் இல்லை என்கிற தகவல் கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமைப்பு ரீதியில், தி.மு.க.,வுக்கு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 78 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். அதில் 38 பேருக்கு சீட் உண்டாம். நெல்லை புற நகர் மாவட்டச் செயலர் ஆவுடையப்பன், மாநகர் மாவட்டச் செயலர் அப்துல் வகாப், தென்காசி மாவட்டத்தின் இரு செயலர்கள் துரை, சிவ பத்மநாபன் ஆகியோர் இதயத்தில் மட்டும் இடம் பெறும் மா.செ.க்கள் லிஸ்டில் உள்ளனர். மாவட்டத்தையே வழி நடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள், பட்டியலை பார்த்து பெயர் இல்லை என்பதை அறிந்தால் உடைந்து போவார்கள். தேர்தல் வேலை பார்க்காமல் ஒதுங்கி விடுவார்கள் என்பது ஸ்டாலினுக்கு தெரியும். ஆகவே, முன் கூட்டியே அவர்களுக்கு செய்தியை கசிய விட்டார். யாரெல்லாம் கொந்தளிக்கிறார்கள் என்பதை பார்த்து சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் தரும் தகவல் அடிப்படையில், ஸ்டாலின் அந்த மா.செ.க்களுக்கு போன் போட்டு சமாதானம் செய்கிறார். பலமான கட்சிகளை மட்டும் அல்லாமல், மத்திய, மாநில அரசு எந்திரத்தின் வலிமையை சமாளித்தும் இந்த தேர்தலை கட்சி எதிர்கொள்கிறது என்பதை சுருக்கமாக எடுத்து சொல்கிறாராம். ” நமது வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யுங்கள். முழு வீச்சில் பணி செய்யுங்கள். ஆட்சியில் அமர்ந்ததும் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பொதுமக்களுக்கு கொடுக்கும் அதே இதயசுத்தியோடு உங்களுக்கும் வாக்கு கொடுக்கிறேன். வாக்குகளை நமது வேட்பாளருக்கு அள்ளி வாருங்கள்” என்று ஸ்டாலின் சொல்லும்போதே சில மா.செ.க்கள் உணர்ச்சி மேலிட்டு அவர் மீது சத்தியம் செய்கிறார்களாம். எல்லா மா.செ.க்களும் அப்படி இல்லை. பலர்... தலைவர் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டு, பிடி கொடுக்காமல் மவுனம் சாதிக்கிறார்களாம். ஜெயலலிதா பாணியில் கட்சியை அதிரடியாக நடத்த தளபதி ஆசைப்படுவதாக சக நிர்வாகிகளிடம் குமுறி இருக்கிறார்கள். ” ஒரு மா.செ.க்கும் சீட் கிடையாதுனு சொல்லிருந்தா பரவால்லய்யா.. பாதி பேருக்கு சீட்டும் மீதி பேருக்கு அல்வாவும் குடுத்தா எப்டிய்யா.. தொண்டனே என்னய ரோட்ல நிறுத்தி ' நீ வேஸ்டுய்யா.'.னு சொல்லுவானா மாட்டானா..?” என்று அழாத குறையாக ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.. ஒரு தென் மாவட்ட மா.செ. ஒரு சிலர், இதை இப்படியே விடக்கூடாது என்று, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு கால் போட நம்பர்களை அழுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement