dinamalar telegram
Advertisement

ரஜினி வீட்டில் இருவரும் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அரசியல் கட்சி தொடங்கும் ஐடியாவை, ரஜினி டிராப் செய்ததால், மக்கள் நீதி மய்யத்திற்கு அவரது ஆதரவை கேட்டதாக கூறப்படுகிறது. ரஜினியின் நெருங்கி நண்பர் என்பதால், உடல்நலம் விசாரிக்க கமல் சென்று இருக்கலாம் என்றனர் கட்சியினர். ஒருவேளை அரசியல் பற்றி பேசியிருந்தால், அது குறித்து அறிவிப்பார் என கூறுகின்றனர். ரஜினியை சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு கேட்பேன் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி கூறியிருந்த நிலையில்தான், அவரை சந்தித்து இருக்கிறார் கமல்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement