dinamalar telegram
Advertisement

வேட்பாளரை காட்டினால்தான் தொகுதி ஒதுக்கீடு

திமுகவுடன் சண்டை போட்டு தொகுதிகளை பெற்று, அதை லாபத்துக்கு விற்கும் காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களுக்கு செக் வைக்கிறார் ஸ்டாலின். 2011 தேர்தலில் காங்கிரஸ்க்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் ஐந்தில்தான் வெற்றி பெற்றது. 2016 தேர்தலில் ஒதுக்கப்பட்ட 41ல் 8 இடத்தில் தான் ஜெயிக்க முடிந்தது. காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் சிலர், தங்கள் ஆதரவாளர்கள் என்பதற்காகவும், பணத்துக்காகவும், வெற்றி வாய்ப்பு இல்லாத வேட்பாளர்களை நிறுத்தியதும், தோல்விக்கு முக்கிய காரணம் என திமுக கண்டறிந்துள்ளது. பல வேட்பாளர்கள் தேர்தலுக்கு கொடுத்த பணத்தை அமுக்கி விட்டனர்; சில வேட்பாளர்கள், அதிமுகவுடன் ‛டீல்' போட்டதும் திமுக விசாரணையில் தெரியவந்தது. அந்த கலாசாரம், இந்த தேர்தலிலும் தலைதூக்கும் என்று திமுக எதிர்பார்க்கிறது. வேடசந்தூர் தொகுதியை மணல் மாபியாவுடன் தொடர்பில் உள்ள பெரும் பணக்காரருக்கு வாங்கிக் கொடுக்க, இப்போதே லாபி செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். திருச்சியில் இரண்டு கோடீஸ்வர்களுக்கு ‛சீட்' வாங்கி தருவதாக கூறி, கோஷ்டி தலைவர் ஒருவர் பேரம் பேசுகிறாராம். இனிமேல் இதையெல்லாம் சகிக்க மாட்டோம். வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் சொன்ன பிறகு தான், அந்த தொகுதியை ஒதுக்குவது பற்றி முடிவு எடுப்போம் என்று கறாராக சொல்லிவிட்டதாம் அறிவாலயம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement