dinamalar telegram
Advertisement

எடியூரப்பா ஆவேசம்.

கர்நாடகாவில் விரைவில் புதிய முதல்வர் பதவி ஏற்பார்'' என செய்திகள் வெளியான நிலையில்'' என்னை யாரும் பதவியில் இருந்து அகற்ற முடியாது'' என முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உறுதி பட தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய அவர்'' பொதுமக்கள் ஆதரவும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதரவும் உள்ள வரை யாராலும் என்னை அசைக்க முடியாது'' என குறிப்பிட்டார். 'நான் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக சிலர் தினமும் அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அவர்கள் பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது'' என்று எடியூரப்பா கூறினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement