dinamalar telegram
Advertisement

காங்கிரசுக்கு பினராயி பதில்

கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் அண்மையில் அளித்த பேட்டியில் முதல்வர் பினராயி விஜயன் குடும்ப பின்னணி குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். '' பினராயி விஜயன்,கள் இறக்கிய தொழிலாளியின் மகன்'' என அவர் விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். '' சுதாகரன் என்னைப்பற்றி தவறாக ஏதும் சொல்லவில்லையே! அவர் சொன்னது உண்மை தான். எனது தந்தை மட்டுமல்ல, எனது அண்ணனும் கள் இறக்கியவர் தான். இதில் வெட்கப்பட்ட என்ன உள்ளது? நான் கள் இறக்கிய தொழிலாளியின் மகன் என்பதால் எனக்கு பெருமையே'' என பினராயி விஜயன் பதில் அளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement