dinamalar telegram
Advertisement

மக்கள் மன்ற நிர்வாகி காமெடி

ரஜினி மக்கள் மன்றம் ஒரு கட்சியாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி நிமிடம் வரை அவர்களின் நம்பிக்கைக்கு உரம் போட்ட ரஜினி, திடீரென அரசியல் பிரவேசத்தை கைவிட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் வேறு ஏதாவது கட்சியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யலாம் என்று போய் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டுதான் எந்த கட்சியிலும் சேரலாம் என்று மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் கூறியுள்ளார். எந்த கட்சிக்கு போனாலும் ரஜினியின் ரசிகன் என்பதை மறந்து விட கூடாது என்றும் சுதாகர் சொன்னார். “அவரே அரசியல் வேணாம்னு போயிட்டார். நாங்க எந்த கட்சில சேந்தா அவருக்கு என்ன? போற இடத்துல இவர் பேர சொல்லிகிட்டு இருந்தா பொழப்பு நடக்குமா? இது ரஜினியோட எச்சரிக்கையா அல்லது அவர் பேரால சுதாகர் பண்ற காமெடியா..னு தெரியல” என்று ரசிகர்கள் சிலர் குழப்பத்துடன் கூறினார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement