dinamalar telegram
Advertisement

அத்தியாவசிய தேவைக்கு சென்றுவர ஏற்பாடு

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால், முத்தம்மாள் காலனி, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீட்டை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட மாவட்ட காவல்துறை எஸ்பி ஜெயக்குமார், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் சென்றுவர ஏதுவாக, மீனவர்கள் உதவியுடன் படகுகள் இயக்க ஏற்பாடு செய்தார். மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து படகில் பயணித்து சாலையை வந்து அடைக்கின்றன. அவர்களின் வசதிக்காக அங்கு வாகன ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் வடியும் வரை பொதுமக்களுக்கு உதவ பேரிடர் மீட்டு படையை சேர்ந்த 10 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement