dinamalar telegram
Advertisement

கால்வாயில் பிணமாக மிதந்தான்

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவரது இளைய மகன் லோகேஷ்குமார் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தான். ஜனவரி 13 ம் தேதி மாலை தனது நாயுடன் நடைப்பயணத்திற்கு சென்றான். மீண்டும் வீடு திரும்பவில்லை குடும்பத்தார் பல இடங்களில் தேடிய நிலையில் இரவு 8 மணியளவில் நாய் மட்டும் வீடு திரும்பியது. ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மண்ணிவாக்கத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நீரோடையில் சிறுவனின் சடலம் மிதப்பாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கால்வாயில் தவறி விழுந்து இறந்தானா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement