dinamalar telegram
Advertisement

தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர புதுச்சேரி அரசின் பரிந்துரையின் பேரில் 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதன்படி, பாரதிய ஜனதாவைச்சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக 2017 ல் மத்திய அரசு நியமித்தது. புதுச்சேரி சாந்தி நகரில் உள்ள வீட்டில் இன்று காலை மாரடைப்பால் சங்கர் இறந்தார். காலையில் சங்கரை மனைவி எழுப்பச் சென்றபோது அசைவற்று கிடந்துள்ளார். விரைந்து சென்று டாக்டர்கள் பரிசோதித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தினர். சங்கருக்கு வயது 70. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உடலுக்கு முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, எம்எல்ஏக்கள், மரியாதை செலுத்தினர். இன்று மாலை உடலடக்கம் நடக்கிறது. சங்கர், புதுச்சேரி மாநில பாஜ பொருளாளராக பதவி வகித்து வந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement