dinamalar telegram
Advertisement

முதல் முறையாக ஆன்லைனில் ஏற்பாடு

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. வழக்கமாக திரைப்பட விழா, நவம்பர் 20 முதல் 28 வரையிலான தேதிகளில் நடைபெறும். இந்த முறை கொரோனா தாமதப்படுத்தி விட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் நடைபெறும் இந்த சினிமா திருவிழாவில், 224 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நம்ம ஊர் பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 19 இந்திய கலைஞர்களுக்கும், 9 சர்வதேச கலைஞர்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, சினிமா பார்க்க, 7 தியேட்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' மூலம் வீட்டில் இருந்து படம் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட விழா சினிமாக்களை இரு தளங்களில் காண, வசதி செய்யப்பட்டிருப்பது, வரலாற்றில் இது முதல் முறை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement