dinamalar telegram
Advertisement

ஜெயலலிதா நினைவு நாளில் உறுதிமொழி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையாட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தங்களது வீட்டில் ஜெயலலிதா படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு, ஜெயலலிதா நினைவுதின உறுதிமொழியை ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க, முதல்வர் உள்ளிட்ட மற்ற அனைவரும் திரும்பச்சொல்லி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 2021 தேர்தலில் மூன்றாவது முறையாக, அதிமுகவை மகத்தான வெற்றிபெறச் செய்வோம் என உறுதி ஏற்றனர். அதிமுகவினர் தங்களது வீடுகளில் மாலை 6 மணிக்கு ஜெயலலிதா படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும்படி இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement