dinamalar telegram
Advertisement

ரவுடி கும்பல்களுக்கு சப்ளை செய்தது அம்பலம்

சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகரில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த கார்த்திக் என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவனது செல்போனில் விதவிதமான பட்டாக்கத்திகள், வீச்சரிவாள்களின் படங்கள் இருந்தன. அத்தனையும் இண்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டுகள். கார்த்திக்கை உரிய முறையில் போலீசார் விசாரித்தபோது உண்மையை கக்கினான். வீட்டிலேயே அரிவாள், பட்டாக்கத்திகளை தயாரித்து, ரவுடி கும்பல்களுக்கு விற்று வந்துள்ளான். வடசென்னையின் பிரபல ரவுடி நாகராஜின் கூட்டாளிதான் இந்த கார்த்திக். பட்டாக்கத்தி தயாரிப்பது நாகராஜுக்கு உதித்த ஐடியா. அவன் உத்தரவுப்படி தண்டையார்பேட்டை அன்னை சத்யா நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து, சட்டவிரோதமாக பட்டாக்கத்தி தயாரித்து விற்று வந்துள்ளான். கார்த்திக்குக்கு முகமது யூசுப், குரங்கு சையத், ரஞ்சித், ஆசிப் ஆகியோர் பக்கபலமாக இருந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement