dinamalar telegram
Advertisement

மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நவம்பர் 20ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு பூஜைகள், சுவாமி வீதியுலா நடந்தது. இன்று காலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி கருவறை எதிரில், 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது. 'ஏகன் அனேகன்' என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில் நெய் தீப விளக்கு ஏற்றப்பட்டு, அதை கொண்டு, ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது. மாலை, 5:59மணிக்கு பரணி தீப விளக்கிலிருந்து, கோவில் கொடி மரம் எதிரில் உள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டு, அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காட்டப்படும், அதே நேரத்தில், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். கொரோனா பரவல் காரணமாக, குறைந்த அளவிற்கே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணியில், 4,000போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement