dinamalar telegram
Advertisement

விடிய விடிய சாலையில் நின்ற பரிதாபம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் ஆம்பூரில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. சான்றோர்குப்பம் மற்றும் பனங்காடு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி நேற்று நள்ளிரவில் சாய்பாபா காலனி, இந்திாா நகர் ஆகிய பகுதிகளில் புகுந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியே வந்தனர். வீடுகளில் சிக்கிய வயதானவர்களை இளைஞர்கள் மீட்டனர். பாத்திரங்களும் பொருட்களும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன. ஆம்பூர் நகராட்சி அதிகாரிகள் 3 மணிநேரம் போராடி ஜேசிபி இயந்திரம் மூலம் வெள்ளம் வடிந்து செல்ல வழி செய்தனர். அப்பகுதி மக்கள் விடிய விடிய சாலையோரத்தில் நின்றிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement