dinamalar telegram
Advertisement

தாம்பரம் மருத்துவமனைகளின் அவலம்

சென்னை மற்றும் புறநகர்களில் தொடர் மழை காரணமாக பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனை தாழ்வான பகுதியில் இருப்பதால் வெள்ளம் சூழ்ந்தது. வார்டுகளிலும் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அவர்கள் உடனடியாக முதல், 2வது தளங்களில் உள்ள வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். தாம்பரம் டி.பி.மருத்துவமனையிலும் வார்டுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இங்கு போதுமான கட்டட வசதி இல்லாத நிலையில், மேடான பகுதியில் உள்ள வார்டுகளுக்கு நோயாளிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான உணவு, தண்ணீரை கூட வெளியில் இருந்து எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. தாம்பரம் அரசு மருததுவமனை, டிபி மருத்துவமனை இரண்டிலும் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement